பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. சிவபிரான் பராக்கிரமம்-சிவசரிதம் 73 (4) மழு இலைபோன்றது ; எரிவீசுவது ; கூர் முனையது ; கொடுமை வாய்ந்தது ; திண்ணியது ; தெய்வக் கனல் கொண்டது; வெண்ணிறத்தது; வெல்ல வல்லது; பொங்கி எழும் ஒளி வாய்ந்தது. (5) வில் so பெருமான் மெல்கிய (லேசான)வில் தொழிலான். (எத்தகைய) வில்லையும் லேசாக எடுத்து உபயோகிக்க வல்லவன். - 78. சிவபிரான்-பராக்கிரமம்-சிவசரிதம் (90) (1) ஆரம் பூண்டது உறையூர்ச் சோழன் காவிரியாற்றில் நழுவவிட்ட ஆரத்தை, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, - திரு மஞ்சனக் குட நீரில் அதை வரச்செய்து முழுக்காட்டின போது அது கம் மீது விழும்படி ஏற்றனர் திருஆனைக்கா அனணல. (2) கங்கையைச் சூடினர் பரே கன் வேண்ட ஆர்த்து வந்த கங்கையைச் சடை ஒன்றிலே தங்கச் செய்தார் பெருமான். (3) கரியுரி, சிங்க உரி, புலி உரி போர்த்தது தவத்தினர் செய்த வேள்வியில் எழுந்த சிங்கமும், புலியும், யானையும் அலறப் போர்புரிந்து பிளந்து அவற்றின் தோல்களைப் புனைந்தனர் இறைவர். (4) திருமாலுக்குச் சக்கரம் அளித்தது சலங்கானைப் பிளந்த சக்கரத்தைப் பெறத் திருமால் ஆயிரம் பூக்கொண்டு பூசித்தனர் ; ஒரு பூ குறையத் தமது கண்ணையே இடங்கு இட்டுப் பூசித்தனர். அங்கனம் பூசித்த திருமாலுக்கு அங்கச் சக்கரத்தை இறைவன் அளித்தனர்.