பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி நூல்கள் இந் நூல்கள் செந்தமிழ் அன்பர்கட்கும் செங் நெறிச் செல்வர்கட்கும் இன்றியமையாது வேண்டத் தக்க உயிர்க்கருவூலங்களாகும். அனேத்துலக மாந்தரை யும் கினேப்பிலுஞ் சொல்லிலும் நேர்மைச் செயலிலும் ஒற்றுமையோடு வாழச்செய்வது தெய்வத் தொடர் பின் தெளிநோக்கம் ஒன்றேயாம். அந் நோக்கத்தினே உண்மையாக உண்டாக்குவன சமய நூல்களே. தென் தமிழ்நாட்டுத் தொன்மைச் சமயம் சைவமே. அதனே விளக்குவது தேவார முதலிய அருள் நூல்களே. அந் நூல்களே எளிதிற் கற்று உண்மை கடைப் பிடித்து வாழ்தற்கு உறுதுணை செய்வன ' தேவார ஒளிநெறி' என்னும் நூல்கள். சம்பந்தர் தேவா ரத்தை விளக்கும் ஒளிநெறிகள் மூன்று பகுதி. இதன் ஆசிரியர் தணிகைமணி. ராவ்பகதூர் வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ., அவர்கள். தேவார ஒளிநெறி (சம்பந்தர்) முதல் பகுதி விலை (அச்சில்) இரண்டாவது பகுதி H. H. 8 OO மூன்ருவது பகுதி ., 9 OO