பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருத்தணிகேசன் துணை

 

முகவுரை


மயுர வாகன தேவா வானோர் பெருமாளே!
உனது காவிய நூலா ராய்வேன்
இடர்ப டாதருள் வாழ்வே நீயே தரவேணும்.

-திருப்புகழ் 150.
 

திருத்தணிகேசரை வழிபடு தெய்வமாகக் கொண்ட நீங்கள் தேவார ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டது எப்படி எனச் சில நண்பர்கள் என்னை வினவினர். அவர்களுக்குப் பதிலாக 'இவ்வாராய்ச்சியை மேற்கொளச் செய்தவர் எங்கள் அருணகிரியாரே' என்றேன். ஸ்ரீ சம்பந்த மூர்த்தியையும் முருகவேளையும் வேற்றுமை பாராட்டாது பாடினவர் அருணகிரியார். அவர் 'மயுர வாகன தேவா! உனது காவிய நூலாராய்வேன்; இடர் படாதருள் வாழ்வே நீயே தரவேணும்' என வேண்டினர். முருகவேள் (சம்பந்தர்) அருளிய காவிய நூல் தேவாரம்; ஆகவே தேவாரத்தை ஆய்க என்பது எங்கள் அருணகிரியார் செய்த அருமை உபதேசங்களுள் ஒன்றாம் என்க. அக் கட்டளைக் கிணங்கியே இவ் வாராய்ச்சி எழுந்த தென்க.

2. முப்பது வருடங்களுக்கு மேலாக உத்தியோக முறையில் எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்யவேண்டி யிருந்தபொழுதெல்லாம் எப்பொழுது நமது பொழுது கடவுளின் நாலாராய்ச்சியிற் செல்லுமோ எனக் கவலை கொண்டிருந்தேன். அக் கவலை முதிர் தர 1932 ஆம் வருடம் தேவாரத்துக்கு ஒர் ஆராய்ச்சி நூல் எழுதுவதே நமது வாழ் நாளுக்குப் பயன்தரும் ஒரு பணியாகும் எனத் தீர்மானித்தேன். அந்தக் குறிக்கோளுடன் 11-9-1932 அன்று திருஞான சம்பந்தப் பெருமானது தேவாரப் பதிகங்களை ஆய்ந்தெழுத ஆரம்பித்தேன். உத்தியோகத்திலிருந்த வரையும் தினம் ஒரு பாடலாக ஆய்ந்து, 15-8-1938 பென்ஷன் வாங்கின பிறகு ஒழிவு நேரங் கிடைக்க, 'ஈசற்கு