பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை


யான் வைத்த அன்பினகன்று 'ஆராய்ச்சியும் என் மனம் போன போக்கெல்லாம் மல்கிப் பெருகிற்று. சம்பந்தர் தேவாரத்தில் உள்ள சகல விஷயங்களும் அவ்வவ் விஷயத்திற்குரிய தலைப்பின் கீழ் அகராதி முறையில் ஒரிடமாக வரிசைப்படுத்தி வரவேண்டும் எனத் துணிந்தேன். என்ன சொல், என்ன பொருள் தேவாரத்திலிருந்து சொன்னாலும் அந்தச் சொல், அந்தப்பொருள் இன்ன பதிகத்தில் இன்ன பாட்டில் உள்ளது என்று, அகராதியில் ஒரு சொல்லை எளிதில் எடுப்பது போல, எடுப்பதற்கு எளிதாக அமையவேண்டும் இவ் வாராய்ச்சி நூல் என்னும் ஆசை எழுந்தது. ஆசைக்கேற்ப ஆராய்ச்சித் தலைப்புக்களும் பெருகின. ஆராய்ச்சித் தலைப்புக்கள் மொத்தம் 466; அவை இவையென இந்நூற் பகுதியிற் காணலாம். அவைகளைப் பார்க்கும் பொழுதே ஆராய்ச்சியின் விரிவை ஒருவாறு அளத்தலாகும். இத் தலைப்புக்களில் வராத 7,000க்கு மேற்பட்ட சொல்லகராதி ஒன்றும் நூலுக்கு அனுபந்தமாக வரும். இங்ஙனம் ஸ்ரீ சம்பந்தர் தேவார ஆராய்ச்சி முடியவே சில வருடங்களாயின.

3. “சேயே! வேளே! ... நாயேன் வாழ்நாள் வீணை போகத் தகுமோ தான் என அருணகிரியார் வேண்டினபடி இவ்வாராய்ச்சி எழுதினதின் முதல் நோக்கம் எனது வாழ்நாள் பயன்பட வேண்டும் என்பதே. ஆராய்ச்சியை ஆரம்பித்தது முதல் முடிவு செய்து ஒரு நூலாக்கும் வரையில் எத்துணை முறையோ சம்பந்தப் பெருமானது திருவாக்கில் வந்த சொற்களையும், சொற்றொடர்களையும், அடிகளையும், பாடற் பகுதிகளையும் எழுதவும் படிக்கவும் வேண்டிய பாக்கியம், கிடைத்தது. அருணகிரியார் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்களுள் ஒன்று-

“பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
பகர்வ தற்கு நன்மை தருவாயே”

-(திருப்புகழ் 1252)

என்பது. அடியார்களின் தன்மையைக் கூறவந்த சம்பந்தப்பெருமான்-

“நாவினாலே நவின்றேத்த லோவார்; செவித்
தொளைகளால்
யாவுங் கேளார் அவன் பெருமை யல்லால்
அடியார்கள் தாம்” - (251-4)