பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தேவார ஒளிநெறி (சுந்தார்) அருளாளர் தணிகைமணி, ராவ்பகதூர் 6)I. fr. செங்கல்வராய' பிள்ளை, எம். ஏ., அவர்களாவர். இவர்கள் இளைய பிள்ளேயாரின் மெய்யடியார். அம்மட்டுமன்று; இருமுருகன் திருவடிக்கண் அவன் அருள்பெற்ற மெய்யடியார்கள் பாடியருளிய பாமாலைகளே :முருகவேள் பன்னிரு திருமுறை” எனத் திருவருள்கொண்டு வகுத் துள்ளார்கள். அப் பெரியாரவர்களே ' தேவார ஒளிநெறி' என்னும் அடங்கன்முறையின் வழிகாட்டி என்னும் அருள் நூலே, ஆக்கித் தந்துள்ளார்கள். அந்நூல் சம்பந்தப் பெருமார்ை தேவாரங்களுக்கு மூன்று பகுதிகளும், அப்பர் பெருமானர் தேவாரங்களுக்கு இரண்டு பகுதிகளும், சுந்தரப் பெருமானர் தேவாரங்களுக்கு ஒரு பகுதியு மாக வகுத்துத் தந்துள்ளார்கள். அவை முழுவதும் பற்பல தலைப்புக்களில் அமைந்துள்ளன. மேலும் பின்னிணைப்பாக அகரவரிசையில் அரிய சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மூவர் ஒளிநெறிக்கும் கட்டுரைப் பகுதிகளும் தனித்தனி நூல்களாக வெளிவந்துள. | இத் தேவார ஒளிநெறி' என்னும் நூல்கள் அடங்கன் முறையாகிய அருட் கருவூலத்திற்குப் பொருந்திய திறவு கோலாகும். | இத் தேவார ஒளிநெறி'யின் சிறப்புக்க ளனைத்தும் அவ்வப் பதிப்புரைகளில் விரித்து விளக்கியுள்ளாம். ஆண்டாண்டுக் காண்க. இவ்வரிய திருப்பணியினே ஒரு பெரிய பல்கலைக்கழகத்தார் பல்பெரும் பேராசிரியர்களே அமர்த்திப் பல நூருயிர வெண் பொற் காசுகளையும் செலவிட்டுப் பல ஆண்டுகளாக முடிக்க வேண்டிய பெருஞ்செயலாகும். அதனே நம் பெரியாரவர்கள் திருவருட்டுணையால் கூட்டொருவரை வேண்டாக் கொற்றத் திருவின் ஒருவரா கின்று ஏறத்தாழ முப்பத்து மூன்று யாண்டுகள் புரிந்துவந்த சிவத்தொண்டாய் நிறைவேற்றியுஸ், னார்கள். அவ்வனைத்தும் கழக வாயிலாக வெளிவந்துள்ள