பக்கம்:தைத் திங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

83

தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் வருமாறு: இன்று இவ்வூரார் எல்லாம் தை நீராடுப" என்னும் உரைப் பகுதியும், அதே கிளவியாக்கத்தில் 'அவற்றுள் வினை வேறு படுஉம் பல பொருள் ஒரு சொல்' என்னும் நூற்பாவின் கீழ்த் தெய்வச் சிலையார் வரைந்துள்ள 'இவ்வூர் மக்களெல்லாம் தைந் நீர் ஆடினார் என்ற வழி பெண்பால் உணரப்பட்டது' என்னும் உரைப் பகுதியும், ஒன்றொழி பொதுச் சொல்: என்னும் நன்னூல் (268-ஆம்) நூற்பாவின் கீழ் மயிலை நாதர் வரைந்துள்ள 'மருவூரார் தைந்நீர் ஆடினார்: என்னும் உரைப் பகுதியும், 'பெண்ணாண் ஒழிந்த' என்னும் நேமிநாத (36-ஆம்) நூற்பாவின் கீழ் வரையப்பட்டுள்ள 'இன்று இச்சேரியார் தை நீராடுவர் என்றல் உயர்திணையிடத்துத் தொழிலிற் றோன்றும் ஆணொழி மிகுசொல்', என்னும் பழைய உரைப் பகுதியும் இன்ன பிறவும் தைந் நீர் ஆடுவர்தைந் நீர் ஆடுவர் எனத் தைந் நீர் ஆடலைப் பெரிது படுத்திப் பேசியுள்ளமையைக் காண்க.

'ராடார் சாதனம்':

வானவூர்தியின் வருகையை அறிவிக்கும் 'ராடார்'. என்பதைப் பற்றி இக்காலத்தினர் அறிவர். எவ்வளவு நெடுந் தொலைவு உயரத்தில் வரும் ஊர்தியையும் அது கண்டு பிடித்துக் காட்டிவிடும். அந்த ராடார் சாதனம் செய்யும் வேலையைத் தைத் திங்கள் தண்ணீர் செய்யுமாம். மிகவும் உயரே பறக்கும் வானவூர்தி தெரியும் அளவிற்குத் தைத் தண்ணீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/100&oldid=1323695" இலிருந்து மீள்விக்கப்பட்டது