பக்கம்:தைத் திங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

85

பலர் படிதல்:

தைத் திங்கள் தண்கயம் பலரும் படிந்து நீராடி யின்புறப் பயன்படும் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை, ஐங்குறு நூற்றி லுள்ள,

"நறுவி ஐம்பால் மளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே"

என்னும் (84-ஆம் பாடல் பகுதி அறிவிக்கிறது.

தைந் நீர் தரும் பொலிவு:

தைந் நீர் ஆடுவதால் உடல் பொலிவுடன் தோற்றம் அளிக்குமாம். இதனைத் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் ஓரிடத்தில் தெரிவித் துள்ளார். உரிய தலைமகள் ஒருத்தியைக் காதலிக்கும் தலைமகன் ஒருவனை இன்னொருத்தியும் விரும்பு கிறாள்; தலைமகன் தலைமகளையே மணந்து கொள்வான் - தன்னைப் புறக்கணிப்பான் - என்பதாக ஐயுறுகிறாள், உறவினர் பணித்த வண்ணம் தலை மகள் தைந் நீர் ஆடி நோன்பு செய்வதால் மிகவும் கவர்ச்சிப் பொலிவுடன் தோன்றுகிறாளாதலின் தலைமகன் அவளையே மனைவியாக மணப்பான்தன்னை விரும்பான் எனப் பொறாமை கொண்டு வருந்துகிறாள். இந்நிகழ்ச்சியை, தொல்காப்பியம்-கற்பியலில் உள்ள,


‘மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/102&oldid=1323533" இலிருந்து மீள்விக்கப்பட்டது