பக்கம்:தைத் திங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 தைத் திங்கள்

என்னும் (10-ஆம்) நூற்பாப்பகுதியின் உரை விளக்கமாக நச்சினார்க்கினியர் வரைந்துள்ள

"தலைவற்கு வேறோர் தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறு பாட்டால் தமக்குப் புலப்பட வந்த மனையோளாதற் குரியவள், தமர் பணித்தலில் தைந் நீராடலும் ஆறாடலும் முதலிய செய்தொழில்களைச் செய்யுமிடத்து, இவள் தோற்றப் பொலிவால் தலைவன் கடிதின் வரைவன் எனக் கருதிப்பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின் கண்ணும்" என்னும் உரைப் பகுதி ஓவியப்படுத்திக் காட்டுகிறது. தைப் பூசத்தில் நீராடுவதால் பொலிவு உண்டாகும் என்பதை,திருஞான சம்பந்தரின் திருவிடை மருதூர்த் தேவாரப் பதிகத்தில் உள்ள,


"பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்த",
"பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகாய"

என்னும் பாடல் பகுதிகளும் தெளிவுறுத்துகின்றன. இதுகாறும் கூறியவற்றால், தைந் நீர்ச் சிறப்பும், தைந் நீராடலின் தனிச் சிறப்பும்-தவச் சிறப்பும் தெற்றென விளங்கும்.

மார்கழி நீராடல்:

காலம் மாறும் இயல்பிற்று. பழந்தமிழ்ச் சங்க நூல்களிலும் இலக்கண உரைகளிலும் தைந் நீராடும் தவ நோன்பு பெரிதும் போற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தக் காலத்திலோ, தைந் நீராடும் தவ நோன்பு தமிழகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/103&oldid=1323535" இலிருந்து மீள்விக்கப்பட்டது