பக்கம்:தைத் திங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 89


எனப் பேராசிரியர் பாவைப் பாட்டைக் குறிப் பிட்டுள்ளமை காண்க. அதே நூற்பாவின் உரையில்,

"இது ஐந்தடியான் வந்து ஈற்றடி முச்சீரான் இற்று அடியீற்றின்கண் இருசீர் மிக்கது. திருவெம் பாவை எட்டடியான் வந்திவ்வா றிற்றன."

என நச்சினார்க்கினியர் கூறியிருப்பதுங் காண்க. இன்னும், யாப்பருங்கல விருத்தியுரையிலும் பிற வற்றிலுங்கூடப் பாவைப்பாட்டு பேசப்பட்டுள்ளது. யாப்பருங்கலம் ஒழிபியலில் உள்ள 'நிரல் நிறை முதலிய பொருள் கோட் பகுதியும்' என்னும் (2- ஆம்) நூற்பா வின் விருத்தியுரையில் வண்ணங்களைப் பற்றி விளக்குமிடத்து,

"இன்னவும் ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் அன்னபிறவும் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் எனப்படும். இவற்றை ஐந்தெழுத்தின் மேலும் ஒட்டிக் கொள்க."-

எனப் பாவைப் பாட்டு விதந்து குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அமைப்பினை நோக்குங்கால், பாவைப் பாட்டு என்னும் ஒருவகை நூல் பண்டைக் காலந்தொட்டே இருந்தமை புலனாகும். அவிநயனார் புத்தரைப் பற்றிப் பாடியுள்ள திருவெம்பாவைப் பாட் டொன்றும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

பாவை விளையாட்டு:

பாவைப் பாட்டைப் போலவே பாவை விளையாட்டும் கன்னியருடன் தொடர்புடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/106&oldid=1323539" இலிருந்து மீள்விக்கப்பட்டது