பக்கம்:தைத் திங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார் 93

வாய்' என்னும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாட்டும் மார்கழி நீராடலுடன் தொடர்புடையனவா யிருப்பது காண்க. அடுத்து, பாவை விளையாட்டு ஆற்றங்கரையில் - நீர்த்துறையில், மணலால் பாவை செய்து விளையாடப்பட்டதாகச் சொல்லப் பட்டிருத்தலின் அஃதும் நீராடலோடு தொடர்புடைய தென்பது சொல்லாமலே விளங்கும். பாவை நோன்பு என்பது, வைகறையில் நீராடிப் பாவை செய்து விளையாடப் படுவதாதலின், அது நீராடுதலோடு நெருங்கிய தொடர்புடையது என்பது தெளிவு. இவை கன்னியர்க்குஉரியன என்பதை, எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சேந்தன் திவாகர நிகண்டும் பிங்கல நிகண்டும் தெளிவு செய்துள்ளன.

நாம் இப்போது பிள்ளைத்தமிழ் என்று வழங்கும் நூலைத் திவாகர நிகண்டு 'பிள்ளைப்பாட்டு' என்று கூறியுள்ளது. நோன்பியற்றலும், நீராடுதலும், பாவை யாடலும் கன்னியர்க்கு உரியன; இவை முதலான வற்றைப் பாடுவது பெண்பால் பிள்ளைப் பாட்டாகும். எனத் திவாகரம் கூறுகிறது. இதனை, திவாகர நிகண்டின் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியிலுள்ள,

"ஜங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
சிறுசோ றடுதலும் சிற்றில் இழைத்தலும்
பேசிய பெண்பால் பிள்ளைப் பாட்டே"

என்னும் நூற்பாப் பகுதியால் அறியலாம். திவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/110&oldid=1321658" இலிருந்து மீள்விக்கப்பட்டது