பக்கம்:தைத் திங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 தைத் திங்கள்

கரத்தை அடியொற்றிய பிங்கல நிகண்டும் அதுபோக வகை என்னும் தொகுதியில் இதே போல,


"...ஜங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனிநீர் தோய்தலும் பாவை யாடலும் அம்மனை கழங்கு பந்தடித் தாடலும் பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே"
(268)

எனக் கூறியுள்ளது. பாவை நோன்புக்கும் நீராடலுக்கும் உரிய தொடர்பினை ஒன்பதாம் நூற்றாண்டினர் எனப்படும் ஆண்டாள் திருப்பாவையால் தெளிவாக அறியலாம்.

“...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” (3)


"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்ப
(13)

என்னும் திருப்பாவைப் பாடல்கள் காண்க. பாவைக்குச் சாற்றி நீராடியதாக மேலே முதல் பாடல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பாடல் மிகவும் இன்றியமையாதது. பாவை நோன்பு செய்யும் இடத்திற்குப் 'பாவைக் களம்' என்று பெயராம். அங்குச் சிறுமியர் எல்லாரும் சென்று விட்டனராம். வெள்ளி முளைத்தது; வைகறையில் பறவைகள் ஆரவாரிக் கின்றன. கீரைக் குடைந்து குளித்து ஆடுவதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/111&oldid=1323377" இலிருந்து மீள்விக்கப்பட்டது