பக்கம்:தைத் திங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

105

ஐங்கணைக் கிழவன் என்றால் ஐவகை மலர் அம்புகளுக்கு உரியவனாகிய காமன் என்பது பொருளாம். காதல் துறையின் (காதல் இலாகாவின்) தலைமைப் பொறுப்பாளர் காமன் என்னும் மன்மதன். எனவே, காமனை வேண்டி நோன்பிருந்தால், விரும்பிய காதலர் கிடைப்பார் என்று நம்பி கன்னியர் அவ்வாறு செய்வார்களாம். இதைத்தான் நிகண்டு கூறியுள்ளது. எட்டாம் நூற்றாண்டில் திவாகரநிகண்டு கூறியுள்ள இலக்கணத்திற்கு, ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி இலக்கியமாகத் திகழும் அழகு இன்புறற்பாலது. தைத் திங்கள் தரை விளக்கித் தண்மண்டலம் இட்டு நோன்பு இருப்பதாக ஆண்டாள் அருளியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதுகாறுங் கூறியவற்றால், தைத் திங்களின் சிறப்பும் தவநோன்பிருந்து தைந்நீராடுதலின் சிறப்பும் தெளிவாக விளங்கும். தண்ணிய தைந்நீர் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/122&oldid=1323558" இலிருந்து மீள்விக்கப்பட்டது