பக்கம்:தைத் திங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

109


அந்த உணவைப் பல்லாரோடு உண்பதுதான் உழவர் திருநாளாம் அறுவடை விழாவாகும்.

நன்றித் திருநாள்:

நிலம் விளைதற்கு வேண்டிய மழையைத் தந்த இந்திரனுக்குப் போகி நாளன்றும், நிலம் விளைதல் முதல் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்திற்கும் உதவிய கதிரவனுக்குப் பெரும் பொங்கல் நாளன்றும், நிலம் விளைதற்கு உறுதுணை செய்த மாடுகளுக்கு மாட்டுப் பொங்கலன்றும் நன்றி செலுத்தும் வாயிலாக விழா நடத்துதலின் இதனை நன்றித் திருநாள் என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

கிறித்துவ நாடுகளில் அறுவடை முடிந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்துவர். அதற்கு அடையாளமாக, விளைபொருள்களில் ஒரு சிறு பகுதியை உழவர்கள் கோயில்களுக்குக் கொடுத்து நன்றி செலுத்துவர். இவ்வாறு நன்றி செலுத்த வேண்டும் எனப் பைபிளிலேயே கூறப்பட்டுள்ளது. இதற்கு நன்றி செலுத்தும் விழா' (Thanks Giving Festival) என்று பெயர் வழங்கப்படுகிறது. இந்த நன்றி விழாக் காட்சிப் படங்களையும் சிலர் இல்லங்களில் காணலாம். எனவே, இந்த வகையில், தைத் திங்கள் விழா நன்றித்திருநாளாகவும் விளங்குகிறது.

தொழிலாளர் விழா:

தைப் பொங்கல் விழா தொழிலாளர் விழாவாகவும் திகழ்கிறது. இந்தக் காலத்தில் 'மே' (May)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/126&oldid=1321673" இலிருந்து மீள்விக்கப்பட்டது