பக்கம்:தைத் திங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 தைத் திங்கள்


தாக நற்கீரர் கூறியுள்ளது ஈண்டு ஒப்புநோக்கற் பாலது. எனவே, பொழுது புலரும் காலை நேரமாகிய தைத்திங்கள் தொடக்கமான மகர சங்கிராந்தி, பொழுது போகும் மாலை நேரமாகிய ஆடித்திங்கள் தொடக்கமாகிய கடக சங்கிராந்தியினும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது,

மார்கழித் திங்கள் என்பது தேவர்க்கு வைகறைக் காலமாகும். ஆறு திங்கள் காலமாக இராப்பொழுதில் விளக்கம் அற்றிருந்த மந்தமான சூழ்நிலை மாறத் தொடங்குகிற காலம் மார்கழியாகும். ஆறு திங்கள் காலம் பீடித்திருந்த பீடைகளின் கழிவுக் கால மாதலின் மார்கழியைப் 'பீடை மாதம்' என்று பெரும்பாலார் சொல்வது வழக்கம். அந்தப் பீடையைத் தொலைப் பதற்காகத்தான் மார்கழி முழுவதும் வைகறையில் நீராடிப் பாடல் பாடி வழிபாடு செய்யப்படுகிறதாம். பீடை தொலைந்தது என்பதற்கு அறிகுறியாக, மார்கழி இறுதி நாளாகிய போகி நாளில் பழங்குப்பைகளைக் கொளுத்தித் தூய்மை செய்து, வாழ்க்கையைப் புதுப்பிக்கின் றார்களாம். பழைய நம்பிக்கை உடையவர்களுள் பலர் கூறுவது இது.

பீடை தொலைவதற்காக மார்கழியில் மங்கல வினைகள் செய்யப்படுதலின், மார்கழியை மங்கல மாதம் எனக்கொள்ளும் வழக்கம் குடிகொண்டு விட்டது. கறுப்பு ஆட்டை வெள்ளாடு எனவும், எந்த நிகழ்ச்சியும் செய்வதில்லாத செவ்வாய்க் கிழமையை 'மங்கல வாரம்' எனவும் வழங்குவது போன்றதுதான் இது. இஃதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/135&oldid=1323726" இலிருந்து மீள்விக்கப்பட்டது