பக்கம்:தைத் திங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

121


கணக்கில் உள்ளன. அதிலும், ஒரு மாதமோ-இரு மாதமோ அல்ல; சரியாக ஆறு மாதம் பகல்-ஆறு மாதம் இரவாகும். இது மிகவும் வியப்பல்லவா?

வட துருவத்தில் தொடர்ந்தாற்போல் ஆறு திங்கள் காலம் ஞாயிறு மறையாமல் காய்ந்துகொண் டிருக்கும்; அந்தக் காலம் வட துருவத்திற்குப் பகலாகும். அப்பொழுது தென் துருவத்தில் தொடர்ந்தாற்போல் ஆறு திங்கள் காலம் ஞாயிறே தெரியாது; அந்தக் காலம் தென் துருவத்திற்கு இரவாகும். அடுத்த ஆறு திங்கள் காலத்தில் வட துருவத்தில் இரவும் தென் துருவத்தில் பகலும் இருக்கும். இப்படி மாறி மாறி இரு துருவங்களிலும் சேர்ந்தாற்போல் ஆறு திங்கள் பகலாகவும் ஆறு திங்கள் இரவாகவும் இருக்கும்.

வட துருவத்தில் தொடர்ந்தாற்போல் ஆறு திங்கள் காலம் ஞாயிறு காய்கிறதென்றால் நம் பகுதியில் காய்கிறதுபோல் இராது. இரவு முடிந்து பகல் தொடங்கியதும் ஞாயிறு அடி வானத்தில் தோன்றும்; தோன்றி அடி வானத்தைச் சுற்றி வட்ட மிட்டுக் கொண்டே மேலே ஏறும். கண்காட்சிகளில் மரணக் கிணற்றில் சைக்கிள் விடுபவர்கள் கிணற்றின் அடியிலிருந்து கிணற்றைச் சுற்றிச் சுற்றி வட்ட மிட்டுக் கொண்டே மேலே ஏறுவது போல், வட துருவத்திலும் ஞாயிறு அடி வானத்தைத் தொடர்ந்து சுற்றுச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே மேலே ஏறும். இப்படி மூன்று திங்கள் காலம் மேல் நோக்கி ஏறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/138&oldid=1323729" இலிருந்து மீள்விக்கப்பட்டது