பக்கம்:தைத் திங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முனார்

123


தென் செலவுக் காலம்(தட்சணாயணம்) வட துருவத்தின் இரவுக் காலமாகும்; இதுதான் தேவரின் இரவுக் காலமாம். தென் துருவத்திலும் மாறி மாறி ஆறு திங்கள் பகலாகவும் ஆறு திங்கள் இரவாகவும் இருக்குமாயினும், இந்தத் தென் துருவத்தை அடிப் படையாகக் கொண்டு தேவரின் பகலும் இரவும் கற்பனை செய்யப்படவில்லை. வட துருவத்தின் பகலையும் இரவையும் அடிப்படையாகக் கொண்டு முறையே தேவரின் பகலும் இரவும் கற்பனை செய்யப் பட்டுள்ளன. வட துருவத்தின் பகல் தைத் திங்கள் கால அளவில் தொடங்குகிறது எனவே, இந்தக் கற்பனையின்படி நோக்கினும் தைத் திங்களின் பெருஞ் சிறப்பு நன்கு விளங்கும்.

தைத் திங்கள் தொடக்கத்தில் ஞாயிறு வடபுறம் நோக்கி நகர்வதாகக் கூறப்பட்டது. சரியாகத் தை முதல் நாளில் ஞாயிறு வடபுறம் நோக்கி நகர்வ தில்லை; தைத்திங்களில் வளர்பிறையில் வரும் சப்தமி நாளன்றே- அஃதாவது அமாவாசை கழிந்த ஏழாம் நாளே ஞாயிறு வடபுறம் நோக்கிச் செல்லத் தொடங்குகிறது; அதுதான் 'இரத சப்தமி' என்பது ஒரு கொள்கை. இரத சப்தமி பற்றி முன்பே ஓரிடத்தில் (பக்கம்.... 69) விளக்கப்பட்டுள்ளது.ஞாயிறு ஒவ்வொரு மாதத்திலும் ஏழாம் நாளே அடுத்த இராசியை நோக்கத் தொடங்கி விடுகிறது; இந்த முறையில் நோக்கின், தனுர் மாதம் எனப்படும் மார்கழி ஏழாம் நாளே, தை மாதத்திற்கு உரிய மகர ராசியை ஞாயிறு நோக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/140&oldid=1323732" இலிருந்து மீள்விக்கப்பட்டது