பக்கம்:தைத் திங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 தைத் திங்கள்


மற்றும்.ஞாயிறு சுற்றிவரும் பாதையின் தொடக்க இடமாக இந்த மேட வீடு ஒரு காலத்தில் இருந்தாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தத் தொடக்கப் புள்ளி (First point of Aries)பூரட்டாதிக்கு அருகில் உள்ளது. எனவே, தமிழில் 'தகர் மனை' எனப்படும் மேட வீடு ஞாயிற்றின் உச்ச வீடாக இருப்பதாலும், ஒரு காலத்தில் ஞாயிறு சுற்றுப் புறப்பாட்டின் தொடக்கப் புள்ளியாக இருந்தமையாலும் சித்திரைத் திங்கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதில் வியப்பில்லை.

ஆவணிப் பிறப்பு:

நாட்டுக்கு நாடு-மதத்துக்கு மதம்-இனத்துக்கு இனம்-புத்தாண்டுப் பிறப்பு மாறுபட்டிருப்பதை இன்று உலகில் நாம் கண்டு வருகிறோம். ஆனால், தமிழர்க்குள்ளேயே சித்திரையைப் புத்தாண்டாகச் சிலரும், ஆவணியைப் புத்தாண்டாகச் சிலரும் கொண்டிருப்பது வியப்பே. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தவர்கள் அமைத்துக் கொண்ட அமைப்பு இது. எனவே, இது குறித்தும் பெரிதாக வியப்பதற்கில்லை. ஆவணியைப் புத்தாண்டாகத் தென் பகுதியினர் கொண்டிருப்பதிலும் தக்க பொருத்தப்பாடு உள்ளது. பன்னிரண்டு இராசிகளுள் ஐந்தாவது 'சிம்மம்' என்னும் இராசியாகும். இந்த இராசிக்கு உரிய திங்கள் ஆவணியாகும். தமிழில் 'அரி மனை' எனப்படும் சிம்ம இராசி வீட்டில் ஞாயிறு தங்கியிருக்கும் திங்கள்தான் ஆவணி, பன்னிரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/143&oldid=1323737" இலிருந்து மீள்விக்கப்பட்டது