பக்கம்:தைத் திங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தைத் திங்கள்

கொண்டு இன்புறலாம் என விரும்பி எதிர்பார்க்கும் இளைஞர் குழாம் ஒரு புறம். இவர்கள் மட்டுமா?

பொங்கல் வரின் புது நெல் வீடுவந்து சேரும் எனப் பூரிக்கும் உழவர்கள் ஒரு சாரார். பொங்கல் வரின் புத்தாடையும் பல்வேறு பொங்கல் பரிசுகளும் கிடைக்கும் என எண்ணி எதிர்பார்க்கும் தொழிலாளர் ஒரு சாரார். பொங்கல் வரின் கடைகளில் நிரம்ப வாணிகம் நடைபெறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வணிகர்கள் ஒரு சாரார். பொங்கல் வரின் கலைகள் சிறக்கும் என எதிர் பார்க்கும் கலைஞர்கள் ஒரு சாரார். இவர்கள் மட்டுமா?

பொங்கல் வரின் தந்தையார் வந்து அழைத்துச் செல்வார்-தாய் வீடு சென்று வரலாம் என எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் புதுமணப் பெண்கள் ஒரு சாரார். பொங்கல் வரின் அத்தான் வந்து அழைத்துச் செல்வார் எனத் தாய் வீட்டில் இருந்தபடி அத்தானை எண்ணி ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதுமணப் பெண்கள் ஒரு சாரார், பொங்கல் வந்துவிடின், கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய காதலரை நமக்கு மணம் பேசி முடித்துவைப்பர் எனக் கனவு கண்டு கொண்டிருக்கும் கன்னிப் பெண்கள் ஒரு சாரார். இவர்கள் மட்டுமா?

பொங்கல் வரின், தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் தன் ஆருயிரை அழைத்து வரலாம் என்று ஏங்கி எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் புது மாப்பிள்ளைமார் ஒரு புறம், பொங்கல் வரின், மாமனார் வீட்டிற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/19&oldid=1323580" இலிருந்து மீள்விக்கப்பட்டது