பக்கம்:தைத் திங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 தைத் திங்கள்


சென்றவர் எப்பொழுது வீட்டினின்றும் புறப்பட்டிருப்பினும் சரியே- தைத்திங்களில் வீடு வந்து சேர்ந்துவிட வேண்டும், என்பதாக அவர் எழுதியுள்ளார்."வேந்துறு தொழிலே யாண்டினது அகமே" என்னும் தொல் காப்பிய (கற்பியல்-48) நூற்பாவின் கீழ் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள.

'... அது 'நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு' என்பதனால் பிரிவிற்கு ஓதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்கண் நின்ற சித்திரை தொடங்கித் தையீறாக் கிடந்த பத்துத் திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென்றதனால், 'பின் பனி தானும்' என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்கு உரிய மாசி தொடங்கித் தை யீறாக யாண்டு முழுவதூஉங் கொள்ளக் கிடந்ததேனும் அதுவும் பன்னிரு திங்களும் கழிந்த தன்மையின் யாண்டின தகம் ஆமாறுணர்க,.. 'தைஇ நின்ற தண் பெயற் கடைநாள்... பனியிருங் கங்குல்' (அகநானூறு-24) என்றலின் யாண்டென்பதூஉம், அது கழிந்த தன்மையின் அஃது அகமெனவும் பட்ட தென்பதூஉம் தலைவன் வருதும் என்று காலம் குறித்ததற்கு ஒத்த வழக்கென்று உணர்க. காவல் பிரிவும் வேந்துறு தொழிலெனவே அடங்கிற்று. தான் கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகை உளதாங்கொல் என்று உட்கொண்டு காத்தலின்."---

அரசுத்துறை வேலையாக வெளிநாடு செல்பவர்கள் ஓராண்டு காலத்தில் திரும்பிவிடுவர் எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/27&oldid=1323591" இலிருந்து மீள்விக்கப்பட்டது