பக்கம்:தைத் திங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 தைத் திங்கள்


தையின் பொருள்:

பொங்கல் மாதத்திற்குத் 'தைத்திங்கள்' என்னும் பெயர் வந்ததற்குக் காரணம் என்னவாயிருக்கும்? 'திங்கள்' என்னும் பெயர்க் காரணம் நன்கு தெரிந்ததே. திங்கள் என்பதற்கு நிலா, மாதம், திங்கட் கிழமை என்னும் பொருள்கள் உண்டு. நிலாவாகிய சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு உருவாக்கப்பட்டதனாலேயே மாதத்தைத் "திங்கள்' என்கிறோம். சந்திரனுக்கு உரிய நாளாகக் கருதப்படுவதால் ஒரு நாளைத் 'திங்கள் கிழமை’ என்கிறோம். பண்டைய சங்க நூல்கள் 'மாதம்' என்று கூறாமல் திங்கள்' என்றே கூறுகின்றன. தை மாதம் 'தைத் திங்கள்' என்றே சங்க நூல்களில் வழங்கப் பட்டுள்ளது.

திங்கள் சரி! 'தை' என்னும் பெயர் வழங்கப்பட்ட தற்கு உரிய காரணம் யாது? சங்க காலத்திலேயே தமிழில் வடமொழிச் சொற்கள் வந்து கலக்கத் தொடங்கிவிட்டன. இப்போது தமிழ் மாதங்கள் என்று சொல்லப்படுகிற சித்திரை முதல் பங்குனி யீறாக உள்ள பன்னிரு திங்கள்களின் பெயர்களுள் சில வடமொழிச் சொற்கள் எனப்படுகின்றன. ஆனால் 'தை' என்பது தனித் தமிழ்ச் சொல்லாகும். பெரும்பாலான திங்கள்களின் பெயர்கள் சங்க நூல்களில் காணப்படவில்லை. ஒரு சிலவே ஒரு சில இடங்களில் தலைகாட்டியுள்ளன. 'தை' என்னும் வழக்காறு மட்டும் சங்கத் தொகை நூல்கள் பலவற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/35&oldid=1323600" இலிருந்து மீள்விக்கப்பட்டது