பக்கம்:தைத் திங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரும் பொங்கல்

பால் பொங்கல்:

தை முதல் நாள் பொங்கல் விழா நடைபெறும். இதனைப் 'பெரும் பொங்கல்' என்று வழங்குவது மரபு. போகியன்று பிற்பகலில் கடைக்குச் சென்று புதிய மட் பாண்டங்கள்-பானை சட்டி முதலியன வாங்கி வந்து வைத்துக் கொள்வர். பொங்கலன்று காலையில் பொங்கல் உணவு ஆக்கத் தொடங்குவர்.சிலஊர்களில் கதிரவன் புறப்படும் நேரத்திலேயே செய்யத் தொடங்கி விடுவர், குடும்ப மரபுப்படி இத்தனை பானைகள் வைப்பது-இவ்வளவு பெரிய பானைகள் வைப்பதுஇத்தனை படி அரிசி போட்டுப் பொங்குவது என்றெல்லாம் கணக்கு உண்டு. சோறு பொங்கும் வேலை திறந்த முற்றத்தில்-கதிரவனது ஒளிபடும் இடத்தில் நடைபெறும்.

சிலர் தரையைத் தோண்டிப் புதிதாக அடுப்பு வெட்டுவர்; சிலர் கற்களை அடுக்கிப் புதிதாக அடுப்பு கட்டுவர். இந்தக் கல் அடுப்பைத் தனியாக எடுத்து வைத்திருந்து ஆண்டுதோறும் பொங்கல் நாளன்று மட்டும் பயன்படுத்துவதுண்டு. இதற்குப் 'பொங்கல் அடுப்பு' என்பது பெயர். பொங்கல் பானைக்குப் பூசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/52&oldid=1323626" இலிருந்து மீள்விக்கப்பட்டது