பக்கம்:தைத் திங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 தைத் திங்கள்


போட்டு மஞ்சள்-வேப்பிலை மாலை கட்டி நல்ல நேரம் பார்த்து அடுப்பில் ஏற்றுவர். வசதி மிக்கவர் உலை நீருக்குப் பதில் பால் ஊற்றுவர். வசதி குறைந்தவர் உலை நீருடன் பால் கலந்து ஊற்றுவர். பால் பொங்கி வெளியே வரும்போது அனைவரும் பொங்கலோ பொங்கல்-பொங்கலோ பொங்கல் எனக் கூவி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர். பால் பொங்கியதும் அரிசி போட்டுப் பொங்கிய பானையை இறக்குவர். இறக்கிய பானையைக் கோல மிட்ட தூய இடத்தில் வைப்பர். மற்ற காய்கறி வகைகளும் சிறப்பாக ஆக்குவர். இதனுடன் சிலர் சர்க்கரைப் பொங்கலும் செய்வர். ஒருசிலர் வடை பாயசம் செய்வதும் உண்டு. வெள்ளைச் சோறும் காய்கறி வகைகளும் செய்யாமல், சர்க்கரைப் பொங்கல் மட்டும் செய்பவரும் உளர்.

படையல் முறை:

பொங்கல் உணவை இறைவனுக்குப் படைக்கும் முறையில் இடத்திற்கு இடம் வேறுபாடு இருக்கலாம். எனினும், சிறப்பாகக் கையாளப்படும் முறையைக் காண்பாம்: திறந்த வெளி நடு வாசலில், பொங்கல் செய்த அடுப்புக்கு எதிரிலேயே படையல் நடைபெறும். சாணத்தால் இறையுருவம் பிடித்து வைக்கப்படும். திருவிளக்கும் ஏற்றி வைக்கப்படும். சுற்றிச் செம்மண் கோலம் போட்டிருப்பர். இந்த இடத்தில் குடும்ப மரபுக் கேற்ற எண்ணிக்கையில் இலை போடுவர். சிறப்பாக இருபத்தோரிலைகள் போடுவதுண்டு. ஐந்து இலைகள் போடுபவரும் உளர். பலர் வாழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/53&oldid=1323628" இலிருந்து மீள்விக்கப்பட்டது