பக்கம்:தைத் திங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாட்டுப் பொங்கல்


மாட்டுச் செல்வம்:

தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் நடை பெறும். மாட்டின் பெயரால் ஒரு விழா நடைபெறுவது, தமிழ் மக்கள் மாட்டிற்கு அளித்திருக்கும் சிறப்பினை அறிவிக்கின்றது. அக்காலத்தில் மாடு பெரிய செல்வ மாகக் கருதப்பட்டது. அதனால்தான் செல்வத்திற்கு 'மாடு' என ஒரு பெயரும் வைத்துவிட்டார்கள். அஃதாவது,-மாடு என்னும் சொல்லுக்குச் 'செல்வம்' என்னும் பொருளும் உண்டு. 'மாடு அல்ல மற்றையவை' என்பது திருக்குறள். அவர் ஐந்து கோடிச் செல்வம் உடையவர் - இவர் இருபது கோடிக்கு உரியவர் என்று இந்தக் காலத்தில் சொல்வது போல, அந்தக் காலத்தில் பெருஞ் செல்வர்களைக் குறிப்பிட அவர் அத்தனை மாடுகள் உடையவர்-இவர் இத்தனை மாடுகள் உடையவர் என்று கூறுவது வழக்கமாம். மாடு ஒரு செல்வமாய் இருப்பது ஒருபுறம் இருக்க, அந்தக் காலத்தில் மற்ற செல்வங்களும் மாட்டின் உழைப்பால் உண்டானவையேயல்லவா? பால் பயனையும் ஈண்டு நினைவு கூர வேண்டும். எனவே, நன்றிக் கடனாக மாட்டினைத் தெய்வமாக வழிபட்டு விழா அயர்வது இன்றியமையாததன்றோ?

உண்மைப் படையல்:

மாட்டுப் பொங்கலன்று மாட்டினை வேலை வாங்க மாட்டார்கள். மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/58&oldid=1323635" இலிருந்து மீள்விக்கப்பட்டது