பக்கம்:தைத் திங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

53



யாட்டக்காரர்கள் ஒரு சாரார்; 'புரும் புரும்' மாட்டுக் காரர் ஒரு சாரார்; 'இராசா தேசிங்கு' பாடல் முழக்கக் காரர் ஒரு சாரார்; இப்படி இன்னும்-இன்னும் பலர் உளர். அனைவரும் பரிசு பெற்றுச் செல்வர்.

இவர்களல்லாத ஏழை யெளியவர்களும் இரவலர்களும் வரிசை வரிசையாக வந்து ஏதேனும் வாங்கிச் செல்வர். காணும் பொங்கலைக் கலைஞர்க்கும் தொழிலாளர்க்கும் நன்றி செலுத்தும் விழாவாகக் கொள்ளலாம்.

இந்தப் பரிசளிப்பு, தை மூன்றாம் நாளாகிய காணும் பொங்கல் நாளன்று வடதமிழ் நாட்டில் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்றாம் நாளில் நடைபெறாத ஊர்களில் தை முதல் நாள் அல்லது இரண்டாம் நாளிலேயே பரிசளிப்பு நடைபெறும். பொங்கலைத் தொடர்ந்து பல நாள் வரையும் பரிசளிப்பு நடைபெறுவதும் உண்டு.

கன்னிப் பொங்கல்:

தை மூன்றாம் நாள் சில இடங்களில் 'கன்னிப் பொங்கல்' எனப்படுகிறது. மணமாகாத கன்னியர் நோன்பிருந்து பொங்கல் செய்து படைத்து உண்பது கன்னிப் பொங்கல் ஆகும். இது தை மூன்றாம் நாள் நடைபெறும். இதனைக் கனுப் பொங்கல்' என்பதும் உண்டு. கனுப் பொங்கல் என்பது, கன்னிப் பொங்கல் என்பதன் மரூஉப் பெயராக இருக்கலாம். கன்னியர்கள் பொங்கல் படைத்துத் தாம் உண்பதற்கு முன், தம்உடன் பிறந்தாரும் உறவினரும் நலமாயிருக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/70&oldid=1323709" இலிருந்து மீள்விக்கப்பட்டது