பக்கம்:தைத் திங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடர் விழாக்கள்


தைப் பொங்கலைத் தொடர்ந்தாற்போல மேலும் சில விழாக்களும் சில சிறப்பு நிகழ்ச்சிகளும் நடை பெறுவதுண்டு. இவை பொங்கலின் சிறப்பினையும் தைத்திங்களின் மாண்பினையும் அறிவிப்பனவாகும்.

தலை ஞாயிறு:

பொங்கல் முடிந்ததும் வருகின்ற முதல் ஞாயிற்றுக்கிழமை 'தலை ஞாயிறு' எனப்படும். சில பகுதிகளில் தலை ஞாயிற்றுக்கிழமையில் பொங்கல் நாளன்று செய்தது போலவே திறந்த வெளியில் சர்ககரைப் பொங்கல் செய்து கதிரவனுக்குப் படைத்து உண்டு மகிழ்வர். இந்த நிகழ்ச்சி, பொங்கல் விழா ஒருவகை ஞாயிறு வழிபாடாகும் என்பதை உணர்த்து கிறதன்றே? பெரும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலுங்கூட அஃதாவது,தை முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையாயிருந்தாலுங் கூட, அடுத்த ஞாயிற்றைத் 'தலை ஞாயிறு' எனக் கொண்டாடுவது வழக்கம்.

பொங்கலன்றுதான் திறந்த வெளியில் கதிரவனுக்குப் படைத்தாயிற்றே - பின்னர்த் தலை ஞாயிறன்று வேறு ஏன் படைக்க வேண்டும்?-என்ற வினா எழலாம். ஆயிரம் ரூபாய் அளிப்பவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/73&oldid=1323714" இலிருந்து மீள்விக்கப்பட்டது