பக்கம்:தைத் திங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 தைத் திங்கள்

பெண்கள் விழுங்குவா என்று சொல்லப்படுகிறது. மயில் தோகை வைத்துப் படைப்பதனால்தான் மயிலார் படைத்தல் என்று பெயர் வழங்கப் படுகிறதா? மயிலாருக்குப் படைப்பதனால் மயில் தோகை வைக்கப் படுகிறதா?

உலகியலில் மயில்தோகை, சமயத் தொடர்பு உடையவர்களாகக் கருதப்படும் பலர் கைகளில் இடம் பெற்றுத் தெய்வத் தொடர்பு உடையதுபோல் தோன்றுவதைக் காண்கிறோம். இந்த முறையில் மயிலார் வழிபாட்டில் மயில்தோகை இடம்பெற்றி ருக்கலாம் என்பது ஒருபுறம் இருக்க,-மயிலார் என்னும் சொல்லை நோக்கும்போது, மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகனது நினைவும் வருகிறது. எனவே, மயிலார் படையல் என்பது, கன்னியர்கள் முருகனுக்கு நோன்பிருந்து செய்யும் படையல் என்று பொருள் கொள்ளவும் இடம் தருகிறது, சிலர் முருகனுக்கு நோன்பு கிடப்பதும் நடைமுறையில் காணப்படுகிறது. இந்தக் காலத்தில் இது குறைந்து வருகிறது.

சிறு வீட்டுப் பொங்கல்:

திருநெல்வேலி மாவட்டம் போன்ற சில பகுதிகளில் சிறுவீட்டுப் பொங்கல் என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. சிறுவர்களுக்குத் தனி மகிழ்ச்சியூட்டு வதற்காகச் சிறுவர்கள் பெயரால் பெரியவர்கள் செய்யும் பொங்கல் படையல்தான் இது. பொங்கல் செய்து, கோலத்தாலேயே வீடமைத்து அதில் பொங்கலை வைத்துப் படைத்து உண்டு மகிழ்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/77&oldid=1320987" இலிருந்து மீள்விக்கப்பட்டது