பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வ. கோ. சண்முகம்

மனக்கு ழப்பமும்
கோணல் புத்தியும்
ஓசை வடிவில்
உலவிடும்! ஆனால்
ஆசை களுக்கும்
அவசியங் களுக்கும்
உங்கள் ‘மியாவ்’களில்
உருவங்களே இல்லை!
எங்கும்; எதற்கும்!
ஏகசொல் ‘மியாவ்தான்'

நீங்கள் நினைப்பதை
நீங்களே அறிவரீர்!
தூங்காமல் தூங்கும்
சுயதவம் உங்கள்
பாரம் பரிய
வரப்பிர சாதமாம்!!
ஆரம்பம் முடிவு
எதுவும் இல்லா
'இருட்டும்’ ‘மெளனமும்'
இரட்டைச் சுகங்கள்!
திருட்டும் காமமும்
தேடும் பாதைகள்!
'இருட்டை’ விழிகளால்
'மெளனத்தை’ நாக்கால்
சிருட்டித்துக் கொள்ளும்
திறமையும் பெற்றீர்!