பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

31


விந்தை!


'வஞ்சி!' யென நானழைத்து
வாயூற நெருங்குகையில்
அஞ்சியவள் ஏன்ஓட வேண்டும் ? - அச்
சஞ்சலமே என்னுள்ளத்தைத் தீண்டும்!

கொல்லையிலே கிணற்றடிக்குக்
குடமேந்திப் போகையிலே
"மெல்லியலே நில்லடியே!" என்றால் - ஏன்
சொல்லெதுவும் கூறாமலோடு கின்றாய் ?

செம்பவள இதழ்களிலே
தேன்முல்லைச் திரிப்புதிர
வம்பளந்து குதிப்பாளே அன்று! - அந்த
‘ஜம்ப’மெலாம் காணோமே இன்று ?