பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

35


நோவு திர நூறு முத்தம்...!
(கிராமியப் பாடல்)
அவன்: பொளவு கொண்டா மாரி யம்மா
பொளவு கொண்டா மாரி!
விளுந்து விளுந்து உளைச்ச தில்லே
மேலு காலு நோவுது!
அவள்: வச்ச கஞ்சி ஆறி அங்கே
வாளைத் தண்டாக் குளிருது!
இச்சைப் பேச்சுப் பேசிக் கிடக்க
இந்த நேரம் ஆவுமா ?
அவன்: கஞ்சிக் கிஞ்சிப் பேச்சை இப்போக்
காது கேக்க மறுக்குது!
கொஞ்சிப் பேசி ரெண்டு பேரும்
ருசியா இருக்கத் தோணுது!
அவள்: கையை காலே ஆட்டிக் கிட்டு
கண்ணை ரவையா சொளட்டுறே!
பையப் பையக் கிட்டே வந்து
பாயைத் தட்டிப் போடுறே!