பக்கம்:தைப்பாவாய்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னல் கோலம்! சின்னப் பூவே சிரிக்கின்றாய்! தெய்வப் பிஞ்சே சிரிக்கின்றாய் -! என்ன எண்ணிச் சிரிக்கின்றாய்? எதனைக் கண்டே சிரிக்கின்றாய்? தென்றல் இளைத்த மலர்ச் சிரிப்போ? சீத நிலவின் பளபளப்போ? என்றும் சாகாக் கங்கையிடம் இரவல் வாங்கிய சலசலப்போ? 'கொடுத்ததை' எண்ணும் பூரிப்போ? 'கொண்டதைக்' கணக்கிடும் பெருமிதமோ? 'அடுத்ததை' நோக்கும் எதிர்பார்ப்போ? 'அறுத்ததை'க் காக்கும் குதிர் வைப்போ? 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/16&oldid=1499261" இலிருந்து மீள்விக்கப்பட்டது