பக்கம்:தைப்பாவாய்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப்பாவாய் 41 மாற்றந்தான் வாழ்வினுக்கே மணமாகும் என்பார்! 'மாறுதலே புதுச்சுவையின் கருவாகும்!' என்பார்! தோற்றத்தில், தோரணையில், அணிஉடையில் எல்லாம் சுடர்வீசும் கவர்ச்சிக்கே 'மாற்றந்தான்' மையம்! ஊற்றாகக் கற்பனைக்ள பொங்கிவரக் கலையின் உருமாறிப் புதுத்தடத்தில் கால்வைக்க வேண்டும்! 'நேற்'றதுபோய் 'இன்று' வந்து 'நாளை' என ஆகும் நிலையன்றோ புவியோட்டப் புதுமைகளின் சித்து! 'புத'னுக்குப் பின் 'வியாழன்' வந்தாக வேண்டும்! பொன்னாளாய் அந்நாளைக் கொண்டாட வேண்டும்! இதமான - முறையான கலைமலர்ச்சி இதுவே! ஏங்குகின்ற - அஞ்சுகின்ற இளையதலை முறையின் மதலைகளும் கலைப்புனலில் இணைந்தாட வேண்டும்! வாழுகின்ற - வளர்கின்ற கலைத்துறையைச் சிலரே 'முதலைக்குளம்' ஆக்குகின்ற நிலைநீண்டால் - காலம் மோதிவிடும்! முதலையோடு குளம்தூ ர்ந்தே போகும்! (1964)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/50&oldid=1499310" இலிருந்து மீள்விக்கப்பட்டது