பக்கம்:தைப்பாவாய்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப்பாவாய் படி உடைந்த ஏணியோ? - புனல் பாழ்த்ததொரு கேணியோ? முடிவடையும் கதையதோ? - ஆண்டை மூட வரும் 'பங்குனி'! படை இழந்த வீரமோ? - அருட் பதமிழந்த ஈரமோ? விடை கொடுக்கும் கரங்களோ? - குளிர் விசையொடுங்கும் 'பங்குனி'! ஆண்டிரண்டின் பாலமோ?- வசந்த அழகுவரும் சாலையோ? தூண்டிடாத தீபமோ? - புதிர் . சொல்ல வரும் 'பங்குனி'! கதிர் அறுத்த வயலதோ? - வெளிக் காற்றிளைத்தப் புயல்தோ? சதிர் நிறுத்திய கால்களோ? - ஒரு தாய் நிகர்த்தப் 'பங்குனி'! 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/52&oldid=1499313" இலிருந்து மீள்விக்கப்பட்டது