பக்கம்:தைப்பாவாய்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனக புஷ்பங்களாக- கால நட்சத்திரங்களாக. ஆகிவிடுகின்றனவே! தைப்பாவாய் உன் தொண்டின் தொடர்ச்சியில் ஒரு சூட்சமம்! விக்ரக அழகுகளின் நீ - விளையாடும் லீலைகளைவிட 'விலகும் அழகுகளில் வெறும் இருட்டுப் பரப்பில் ரூபக் கோணல்களில் கூடத் தூய்மையான ஆத்மாவின் தூலகரீகரமாக நீ வடிவெடுப்பது எனக்கு மட்டும் எப்படியோ தெரிகிறதே என்ன விந்தை இது..? ஏனோ 'உதய’ங்களில் உறைவதை விட 'அஸ்தமன' ங்களில் அமர்ந்திருப்பதை நீ எப்போதுமே அதிகமாக விரும்புகிறாய். 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/60&oldid=1499323" இலிருந்து மீள்விக்கப்பட்டது