பக்கம்:தொடாத வாலிபம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகல் நித்தம் பிறக்கும் இரத்த வெய்யில் உலகின் இருட்டை இழுத்து எறிந்தது! எழுந்தேன். விழிகள் எனக்குமுன் எழுந்தன! சேர்த்து மனைவியைப் போர்த்திய உடம்பில் g” 零 *.* போர்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு, வெளுத்த உலகின் வெளிப்புறம் நடந்தேன். துடிக்கும் அலேகள் : தாமரை ஊரில் படுத்துக் கிடக்கும் பெருமலே: மாந்தளிர், பனித்துளிக் கூட்டம் அனைத்தும் மின்னின ! வெளிமான்' என்னும் வேந்தனைக் குறித்துப் பெருஞ்சித் திரளுர் பாடிய பாடலப் பாடிக் கொண்டே போகையில் நெருஞ்சிமுள் நடக்கும் கால்தனில் நறுக்கெனத் தைத்தது. குளக்கரை வந்தேன். கோதை ஒருத்தி, போரிடும் அம்புப் பார்வையால், தோள்தனில் ஈரப் புண்செய்து என்ன அனுப்பினுள் ! தோலுடல் எரியத் தொடர்ந்து கடந்தேன். விதியின் வழியாய் விரைந்து போகையில், ASA SSASAS A SAS SSAS iSAS SSAS "8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/12&oldid=930796" இலிருந்து மீள்விக்கப்பட்டது