பக்கம்:தொடாத வாலிபம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா சோம்பேறிக் கூட்டத்தை , செத்துப்போன மொழியை, ஜீவமொழி என்று பேசித் திரியும், பெரிய விழி படைத்த புல்லர்களை கள்ளர்களே: பசுத் தோல் போர்த்த புலி மனிதர்களை, பித்தர் களே அவர்களது பித்தலாட்டங்களை, எடுத்துச் சொல்லாமல், எழுதிக் காட்டாமல் : பரத்தைய ரின் மார்பிலிருந்து, சிந்துகின்ற சந்தனத்தையும்: அழகிய கூந்தலிலிருந்து உதிர்கின்ற அரும்பை யும் ; அவர்கள் அங்கத்தின் தங்க நிறத்தையும் , பழத்துண்டு உதடுகளையும், படுக்கை விளையாட் டையும்-எழுதி எழுதி, என் சுயநலத்தை, அபி விருத்தி செய்து கொண்ட அயோக்யன். மனித ரிலே நான் மகா கெட்டவன். சிற்றின்பத்தினுல் சீரழிந்தவன். துாராத பசிக்குழியும், திராத வியாதி யும் உடையவன் ! தாம்நாடே.என் நோய் ரத்தத் தால், உன் உடல் சேருவதை நான் விரும்பவே . இல்லை. பாம்பு, பழிகுன்ம் படைத்தது என்கிருர் களே, அது கூட, என்னைப் பல்லால் தீண்டபயப் படும், அவ்வளவு அபாய மனிதன் நான். சிங்கத் திருநாடே இதோ நீண்டு ஓடுகி கிறதே ஆறு, இதிலே வேண்டுமானல், என் பிரேதத்தைப் புரட்டிவிடு. எனது அங்கத்தின் ஈர எலும்புகள்-இந்த ஆற்றிலே, மிலாறு போல மிதந்து செல்லட்டும் ! (என்று கூறி விழப்போகிருன். அப்போது அங்கே வந்த பெரியவர், அதைப் பார்த்து) பெரி : கில். கில் (என்று ஓடிவந்து திாண்டவனேத் தடுத்து, அவனைப் பார்த்து) என்ன காரியம் செய்யத் துணிந்தாய் ! தம்பி, தற்கொலை-ஆயுள் நேரத்தை அணுவசியமாக வீணுக்கிக் கொள்ளும் G6Jo....... - தாண் ; அதுமட்டுமல்ல-கோழைத்தனங்கூட. மர ணத்துக்குத் தரும் மதிப்பை ; மனிதன் தற். 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/124&oldid=930801" இலிருந்து மீள்விக்கப்பட்டது