பக்கம்:தொடாத வாலிபம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குள்ள நரிக் கூட்டம்

கோவலன் வாழ்ந்த ஊரானே-போர்க்
கருவிகள் செய்து தரும் கருமானே!
ஆவிபோன்ற தமிழ் ஏட்டை - கடல்
அழகும், மனையும் படுத்துள்ள நாட்டை,
கேவல் வாழ்க்கை நடத்தும் - நரிக்
கூட்டம் புருந்து கெடுக்குது தோழா!
சாவித் தலையது போலே-பொத்தல்
தலையுள்ள மூடரின் ஆதர வாலே,
சீவிக்க வந்தவர் இன்று-அர
சாங்கத்தின் மேடையில் வாழ்கிறார் நன்று.
ஆயிரம் மாறுதல் செய்து - வையம்.
அன்றாடம் கல்வி வளர்க்கும் இந்நாளில்.
காய்கனி தின்னும் முனிவர் - காலக்
கல்வி முறையை நுழைப்பது நன்றோ?
ஈயின் சிறுதலை போலே-அமைந்
துள்ளதீக் குச்சி இருந்திடும் போது
தீயை எழுப்ப முன்னோர் போல் - கல்லைத்
தட்டச்சொல் வோர்முழு முட்டாள்க ளன்றோ
(கோவ)


12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/16&oldid=1416307" இலிருந்து மீள்விக்கப்பட்டது