பக்கம்:தொடாத வாலிபம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கஞ்சத் தனத்தில், கிண்டல் செய்வதில், இவனுக்கு நிகராய் எவனுமே இல்லே. ஒலைச் சுவடி காலத்து வைதிக உள்ளம் படை த்தவன் இல்லா விட்டால், உருட்டிய சோற்று உருண்டையைப் போல குடுமி வைத்துக் கொண்டி ருப்பான ? அழகிரி வந்த ஐந்தா வதுநாள் பக்கிரி யோடு பழக்கம் வைத்தான். கஞ்சனும், வந்த கயவனும், அதுமுதல் நண்பர்கள் போல நடித்து வந்தனர். அழகிரி ஒருநாள் அவனிடம் வந்து, ' எனது மனைவி இன்று, அவளது பெற்ருேர் வீடு போகப் போகிருள். புடைவை ஒன்று உடனே வேண்டும். கடன்கொடு வாரக் கடைசியில் உனக்கு பணம்கொடுக் கின்றேன் பக்கிரி' என்ருன். கடன்எனும் சொல்லைக் காதில் கேட்டதும் பக்கிரி நினைவு பலபிரி வானது ' அருமை நண்பனே ! ஆருயிர் நண்பனே! காயின் கால்விரல் நெருக்கம் உள்ளது: காமோ அதைவிட கெருங்கிய நண்பர்கள் ! - 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/31&oldid=930826" இலிருந்து மீள்விக்கப்பட்டது