பக்கம்:தொடாத வாலிபம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் மயக்கம் அன்பே ! கிர்வான விளக்குகள் நித்திரை புரிந்த நேரத்திலே நேற்று, உனது பட்டுக் கடிதம் கிடைக்கப் பெற் றேன். அதில் அடங்கியிருக்கும் அந்தரங்க எழுத்துக் களே எல்லாம் ஒசையிட்டு ஆசையோடு வாசித் தேன். - அந்த உச்சரிப்புக் காற்றினால், என் பக்கத்திலே படுத்திருந்த பெரும்பாணர் என்னும் புலவரின் தூக்கங்கூட கெட்டுவிட்டது. - கொல்லி மலைத் தேனே! உனது கடிதம் ஒரு கல். இவ்விதம் கூறுகின் றேனே என்று நெற்றியைச் சுருக்கிக் கொள்ளாதே! நான் குறிப்பிடுவது, காலில் உறுத்துமே கூழாங் கல், அதுவல்ல கடித்துத் தின்னும் கற்கண்டு கட்டி, கற்கண்டு கூட, தித்திக்கும் கல்தானே ! துணி மூடிய மலையே! ' கடிதம் கொண்டு வந்து கொடுத்த. உன் வேலைக் காரி இருக்கிருளே அவள், மிகவும் கெட்டிக்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/34&oldid=930829" இலிருந்து மீள்விக்கப்பட்டது