பக்கம்:தொடாத வாலிபம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா இதில், கடவுள் என்னும் கதாபாத்திரமே கிடை யாது. ஆனால், ஆண்டவன் இல்லாத இடமே எங்குமில்லை-என்று கூறிவிட்டு, பிறகு, கோவிலைக் காட்டி : எல்லாம் செய்யவல்ல இறைவன் இங்கேதான். இருக்கிருர். எல்லோரும் வந்து வணங்குங்கள் ' என்று கூறுகிருயே; எங்கும் தங்கியிருக்கும் காற்றை இந்த இடத்தில் மட்டுந்தான் இருக்கிற தென்ருல், நீ புத்திமான பைத்தியச் காரன? இல்லை மனித மோசக்காரணு ? என்று, கடவுள் பிரியனைக் கேட்டி ருக்கிறேன். ' கடவுளே நினைக்காமலிருக்கலாமா ?” என்று நீ கேட்கலாம். - - மீன், குளிக்க வேண்டுவதில்லை ! அதுதான் தண் னிரிலேயே இருக்கிறதே. இந்தக் காவியத்தில் அரசனுக்கும் அங்காட்டு மக்களுக்கும் போர் பிறக்கிறது. முடிவில், அசைந்த ஆயுதங்கள் முடி மன்னனை மரணமாக்குகின்றன. மகுடம் மண்ணிலே உருளுகிறது. அனைவரது ஆசையும் நிறைவேறுகிறது. இது கதை திருப்பிச் சொன்னல்-இது என் கனவு. - இன்று இல்லாவிட்டாலும், இரண்டாயிரம் ஆண்டுகள்: இறந்தகாலம் ஆன பிறகாவது: க்விங்ாக் குப் படைத்த இந்த அம்பிகாபதியின் அர்சியல் கனவு நிச்சயம் நிறைவேறத்தான் போகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/48&oldid=930844" இலிருந்து மீள்விக்கப்பட்டது