பக்கம்:தொடாத வாலிபம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா எனது குடிசையைச் சுற்றிலும் கெற்கதிர்கள் முற்றிக் கிடக்கின்றன. அவைகளை எடுக்கும் உரிமை குருவிகளுக்கு இருக்கிறது. ஆனல் எனக்கு இல்லை. அந்தக் கதிர்களும், என் குடிசைக்கு வராது. ஆணுல் என் ஏழைக் கணவர், தனது மேல் துண்டில் வாங்கி முடி போட்டிருக்கும் அரிசிதான் வரும். அரிசியும் அவரும் வந்த பிறகுதான், அடுப்பு வெளிச்சமடையும் ! என் கணவர் இருக்கிருரே, அவரைக் கல்யா ணம் செய்து கொண்டதற்குப் பதில்-பேசாமல் அவரது புத்தகங்களைக் கல்யாணம் செய்து கொண் டிருந்தாலும் கிம்மதி ஏற்பட்டிருக்கும். ஏனென்ருல் புத்தகங்கள் பேசுவதுமில்லை. அதிகாரம் செய்வதும் கிடையாது."ஆல்ை இவர் இரண்டும் செய்கிருரே! பாவம் ! என் கணவரைக் குறை கூறுவது தவறு. குடலுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் விரோதி ஆயிற்றே பசி' அது தாக்கியதும், தாண் டிக் குத்துகிருர் என்னிடம். - என் கணவர் : சுயமாக வீடு கட்டத் தெரியாக நாகப்பாம்பு போன்றவரல்ல. பிறர் பொருளைப் பிரதி பலித்துக்காட்டும், கண்ணுடி போன்றவரல்ல. அறிவு மாருட்டம் செய்பவரா? அல்ல அல்ல! இரவல் பெருமை தேடும், இலக்கியத் திருடரா? அல்லவே அல்ல! இப்படி ஏன் அழுத்தமாகச் சொல் கிறேன் தெரியுமா? 53 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/55&oldid=930852" இலிருந்து மீள்விக்கப்பட்டது