பக்கம்:தொடாத வாலிபம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பேடு ஒப்பந்தம் யும் நெருப்பு. என்ன சாம்பலாக்கப் போகிறது. மண்ணுல் ஆன இந்த பூமி, எனது உடல் மண்ணுல், இன்னும் கொஞ்சம் உயரப்போகிறது. அசையும் விழியிலே-நீரோடு ; கழுத்தில், ஆவா ரம் பூப் போன்ற-தாலியோடு ; அழகு கெற்றியிலே -பொட்டோடு : சிவந்த சரீரத்திலே - மஞ்சள் சேலையோடு : புகை நெருப்பிலே நான் உயிரோடு எரிவதை, பக்கத்திலே நின்று பார்ப்பவர்களில் பல ருக்கு. அவர்களது பளிங்குப் பார்வையிலே உப்பு நீர் வடியும் ! ' பகைவர் காட்டை, ரத்த மாக்கிய மஹமத் கான் : பாய்ந்து வந்த கத்தியினல் பிணமானர். நமது அரசர், ராஜா தேசிங்கும் : விரோதிகளைக் கொன்ற அதே வாளினல், வயிற்றில் குத்திக் கொண்டு இறங் தார். இன்று, அவரது மனைவிக்கும், இந்த அக்கினிச் சாவு! பாவம் ! எல்லாம் அவரவர்கள் தலைவிதி போல் தான் கடக்கும்' என்று சொல்லலாம், சிலர். " அறிஞர்களுக்கும், அயோக்யர்களுக்கும், அவர் களது சாவு நேரம்-அநேகமாக நல்லதாக இருப்ப தில்லை " என்று கூறி, வருத்தப்படும் அனுபவஸ்தர் களும் இருக்கலாம். ஆடம்பரச் செலவு செய்து, என் சரீர்ச் சாம்பலே, கங்கையிலே கரைக்க, சாஸ்திரிகள் தினைவு படுத் தலாம். குடத்து கீரிலே-சக்தனத்தைக் கரைக்கலாம். பூசிக்கொள்ளப் பயன் படும், அது. வயல் நீரிலே-எரு வைக் கொட்டலாம். அது. பயிர்களே பலப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/65&oldid=930863" இலிருந்து மீள்விக்கப்பட்டது