பக்கம்:தொடாத வாலிபம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்போடு ஒப்பந்தம் குற்றங்களால், இறந்துகொள்ளலாம்-அந்த மூச்சுமுடிவை, உலகம் நினைவிலே வைத்துக் கொள்ளாது. ஒன்றில்ை இறப்பதைவிட ஒன்றுக்காக இறந்து கொள்வது தான்-பெருமை. இந்த மாதிரி சாவுக்கு தான்-சரித்திரம் கிடைக்கும். "இவ்வளவுக்கும் காரணம் போர்தான். அதுமட் டும் ஏற்படாமல் இருந்திருந்தால்-அரசருக்கும். அரசிக்கும், இப்படி முடிவுவந்திருக்குமா? என்று உங்களிலே பலர், என் பிரேதத்தின் பக்கத்திலே கின்று பேசிக் கொள்ளலாம். - இந்த உலகம், அமைதியோடு இருக்கும், கிண் ணத்தின் தண்ணீர் போன்றதல்ல. அலையோடு அலை இடித்துக் கொண்டே இருக்கும்-கடல் போன்றது. இங்கே, நீதியும் அநீதியும்-சேர்த்தே வைக்கப் பட்டிருக்கிறது. ஆடுகளின் பின்னல். கத்திகள் போய்க்கொண்டே இருக்கின்றன. உண்மை ஒருபக்கம் ஒதுங்க-பொய்யே. பிரபல மாக்கிகொண்டுவருகிறது. இப்படி இருந்துவரும் உலகில்.எப்படி எதிர் பார்க்க முடியும், போர் எற்படாது என்று ? அதிலும்வெள்ளத்திலே மிதக்கும் படகுக்கும். வேந்தன், இம்மாசனத்துக்கும்: எந்தச் சமயத்திலும் ஆபத்து இருந்து கொண்டுதானே இருக்கும்: :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/69&oldid=930867" இலிருந்து மீள்விக்கப்பட்டது