பக்கம்:தொடாத வாலிபம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

乐町5T ஆனால், தொடவேண்டிய அவர் மட்டும். தொடவே இல்லை. கண்ணே-என்று. அவர் என்ன அழைக்கவு மில்லை. கரும்பே-என்று. நான் அவரை நெருங்கவு மில்லை. பச்சிலை மெத்தையிலே படுத்திருக்கிருேம் , நானும் கணவனுமல்ல, நானும்-மான் குட்டியும் ! அந்தமெத்தையிலே அவர் இருந்தால் அல்லவா, எனது சயனத்திலே சுகம் இருக்கும். ராஜகிரியில்-அவரது விசாரணை நடக்கும். ரத்ன கிரியில்-மந்திராலோசனை சபை கூட்டுவார். ஆல்ை, எனது அந்தப்புரத்துக்கு மட்டும் அவர் வரமாட்டார். அவரும் நானும், அருகிலே இருந்திருக்கிருேம், ஆனல் பேசியதில்லை . பேசக்கூடாதாம்! எதிரும் எதிருமாக இருந்திருக்கிருேம், எத்தனை யோ சந்தர்ப் பங்களில் இருந்தும், சோதிமுகங்கள் சந்தித்துக் கொண்டதில்லை-சக்திக்க முடியவில்லை. இந்தத் தடை ஏன் ? திரைதான் எதற்கு 2. 'உங்கள் மகனும் மருமகளும்-மூன்று ஆண்டு கள் முகதரிசனம் செய்யக் கூடாது. தோஷம் இருக் கிறது. ” என்று சோதிடன் சொல்லிவிட்டானம்! அதற்காகத்தான். இந்தத் திரையும்-திண்டாமையும்! அவரோடு தேரிலேறி, தேசமாளவேண்டும்" என்று நினைத்தேன்-நிறைவேறவில்லை. 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/72&oldid=930871" இலிருந்து மீள்விக்கப்பட்டது