பக்கம்:தொடாத வாலிபம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடாத வாலிப்ம். காட்சி-5 இடம் :-குருக்கள் வீடு இருப்பவர்கள் :-குருக்கள். அவர் மனைவி அம்புஜம், - மகள் குஞ்சுமணி, தாண்டவன். நேரம் :-விளக்கு இரவு நிகழ்ச்சி: (அறையில், கிளே விளக்கு எரிந்து கொண்டிருக் கிறது. அத்ன் அருகிலே அமர்ந்து, குஞ்சுமணி ஒலச் சுவடியைப் புரட்டிப்படித்துக் கொண்டிருக்கிருள் மெளனமாக. அம்புஜம், தாம்பாளத்திலே அரிசியைக் கொட்டிக் கொண்டிருக்கிருள். அப்போது குருக்கள் குருமூர்த்தி ஐயர், கோவில் பிரசாதத்துடன் உள்ளே வந்து) குரு : இந்தா, இத வெச்சுட்டுக் குடிக்கத் தூத்தம் கொண்டா. (என்று பிரசாதத் தட்டை மனைவி யிடம் கொடுக்க, மனேவி அதை எடுத்துக் கொண்டு போகிருள். அப்போது, குருக்கள் ; குஞ்சுமணியைப் பார்த்து) என்னடி, சுவடியை அழகு பார்த்திண்டிருக்கே. எங்கே அதை இப் படிக் கொடு. (என்று சுவடியைக் கேட்க , கொடுக்கிருள். குருக்கள், அதனைப் புரட்டிப் பார்த்து, பிறகு மகளேப் பார்த்து) பரமசிவ லுக்கு, நீலகண்டன்னு ஏண்டி பேர் வந்தது ? !என்று கேட்க, அப்போது தண்ணிரோடு வந்த அம்புஜம் அதைக் கேட்டு) அம்: சிவன் தலையிலே, சந்திரன் ஏன் இருக்கிறது? எமனுக்கு என்ன வாகனம் : மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் என்ன ?.......இப்படி.


92.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/93&oldid=930894" இலிருந்து மீள்விக்கப்பட்டது