பக்கம்:தொடுவானம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறைதீர்க்க முனைவாய்!


யதுகுலகாம்போதி சாய்ப்பு

எடுப்பு

குயிலே! உனக்கென்றன் குறையை உரைக்கின்றேன்!
குறை தீர்க்க முனைவாய்! புள்ளிக்

மேல் எடுப்பு


கயல்விழி நின்றஎன் காவலன் நாட்டின்
அயலுள்ள தோப்பினில் அணிக்குரல் மீட்டும்

அமைதி


வண்டோச்சி வந்தென் மருங்கணைந்தான் அன்று
மாடப் புறாச் சுட்டிக் காட்டினான் நின்று
கொண்டைக் குயர்முல்லைப் பூமாலை ஒன்று
கொடுத்தான் உயிர்பறித்தான் விடுத்தான் கலங்கஇன்று

தோப்புத் துரவு ஓடை தூமலர்ச் சோலை
தொத்தி விழும்அணில்கள் பாய்ந்திடும் சாலை
காத்திருந்தென் கண்கள் சோர்ந்தன மாலை
காத லுடையவர்க்குப் பிரிதுண்டோ வேலை.


23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/25&oldid=1342902" இலிருந்து மீள்விக்கப்பட்டது