பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 91 அதே மாதிரி தமிழர்களைப் பார்த்தால், சங்கப் பாட்டிலே மக்களைப்பற்றி நிறைய இருக்கும். மாவடு என்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் வீட்டுக்காரி கூட திட்டுவா. "என்ன வயசாச்சு. இப்போ போய் மாவடு மாவடுன்னு' என்று. நான் சொல்வது அடி பயித்தியம் உனக்குத் தெரியாது நான் சைவ குடும்பம்... சைவர்களுக்கு மிக முக்கியம் மாவடு. பத்துப்பாட்டிலே பாணன் சொல்றான்: "நீ போனேன்னா - ஒரு பிராமணன் வீடு இருக்குது. அவன் மாவடு ஊறுகாயோடு பால் சோறு தருவான். அதைத் தின்னுட்டுப் போ. அடுத்தாப் பலே போனேன்னா கோழிக்கறி. பண்ணி சம்பிரமமா வச்சுருப்பான். அதைச் சாப்பிடு' என்கிறான். இந்தச் சமுதாய மக்களைப் பற்றிச் சொல்கிறான். அப்ப இந்த மாவடுவைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்வது சமுதாய மக்கள் வாழ்க்கையைப் பற்றிய தாகும். இது வரலாறு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர், How they lived. அவர்கள் இனவாரியாக என்ன சாப்பிட்டார்கள், அவன் என்ன சாப்பிட்டான். இவன் என்ன நினைச்சான், அவன் என்ன நினைச்சான்... அது வரலாறு. அதை விட்டுப் போட்டு, இவன் இருந் தான். இவன் ஏழு பெண்டாட்டியைக் கல்யாணம் பண்ணினான். அதிலே ஒருத்தி கழுத்தை வெட்டி னான். ஒருத்தியைத் தூக்கிலே போட்டான். இது என்ன? Henry VIII எத்தனை பெண்டாட்டியைக் கல்யாணம்