பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iOO தொட்டனைத்துறும் மணற்கேணி அப்புறம் கல்யாணம் ஆன பின்பு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது கடமை என்கிறோம். வேலைக்குப் போனவுடனே கையூட்டு வாங்காமல் இருந்தா சரி. அவன் கடமையைச் செய்யணும். இது மாதிரி கடமையைச் செய்திருந்தான்னா இந்தியா எல்லா நாட்டை விட முன்னேறியிருக்கும். பிரகலாதனை எடுத்துக் கொண்டால், அகங்கார வளர்ச்சியைப் பார்க்க வேண்டும். பிரகலாதன், இரணியன் அவங்க அகங்கார வளர்ச்சி ஏறத்தாழ ஆண்டவனுக்கு நிகரானதும், பிரகலாதனையோ இரணியனையோ அழிக்க வேண்டுமானால் கடவுளே வரணும். அதுவே பேரகங் காரம் (Super ego) நம் அகங்காரம் போன்றதன்று. காரணம் அகில உலகமும் நான்; என் பேரைச் சொல்லு: என்கிறான். இந்த (ego) அகங்காரத்தைப் போக்க வேண்டுமானால் பகவான் தான் நேரடியாக வர வேண்டும். 'எல்லாம் நான் என்கிறான் அவன். எல்லாம் அவனாக இருக்கிறான். அவனுக்கும் இறைவனுக்கு மிடையிலான வேற்றுமை மெல்லிய படலம் போல அமைந்துள்ளது. அந்தப் படலம் கிழிந்தால் அவன் இறைவனுக்குச் சமமாகி விடுவான். (The distriction is so thin it is like a membrane - ofig membranese @pologistgö, he is equal to God.) இப்ப இந்த ஆணவம் இருக்கே, இதைப் போக்க வேண்டுமானால் பகவான்தான் நேரடியாக வர வேண் டும். ஏனென்றால், எல்லாம் நான் என்கிறான் அவன். அந்தப் படலத்தைக் கிழிக்க வரவேண்டும்.