பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 101 எனவே, அகம் பிரம்மாஸ்மியாக இருக்கிறபோது பிரம்மம் பிரம்மாஸ்மியாக உள்ளது. அத்வைதியாக 'எல்லாம் நானாக இருக்கிறேன் என்று நினைக்கி றானே, அந்த நான் பெரிசாக வளர்ந்துவிட்டது. இந்த நானைப் போக்குவது நம்மாலே யெல்லாம் முடியவே முடியாது. கேள்இது: நீயும் காணக் கிளர்ந்த கோள் அரியின் கேழ்இல் தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்துப் பின் என் வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் (கம்ப.யுத்த.இரணிய வதை:146) 'ஊடலில்கூடப் பொம்பளையை நான் வணங்கினது இல்லடா. நீ சொன்ன நாராயணனையா வணங்குவேன் போடா. நீயுமாச்சு நாராயணனுமாச்சு என்றான். அது தான் பேராணவம். தான் பெற்ற பிள்ளை - ஒரே பிள்ளை. மலையி லிருந்து 'உருட்டுடா நான் சொன்னதைக் கேட்கலன்னா' கொல்லுடா. - புத்திர வாத்ஸல்யம் என்று சொல்வார் வடமொழிக் காரர். தள்ளமுடியாத அன்பு - புத்திர வாத்ஸல்யம். அதிலே தானே உயிரை விட்டான் தசரதன். அந்தப் புத்திர வாத்ஸல்யத்தையும் வென்றுவிட்டானே இவன். நினைத்துப் பாருங்கள் அப்படியானால், தன் ஆணவத் திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்.