பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தொட்டனைத்துறும் மணற்கேணி சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு கல்யாணம் பண்ணி னாரு அடுத்த கல்யாணமும் பண்ணினாரு நேரம் வந்தது. சங்கிலியை நினைக்கல. மேலே போய்ட்டாரு. ஆக விட்டேத்தியா கூட இல்லே. தாமரை இலைத் தண்ணீர் மாதிரி, வாழ்கிறான். அதிலே தவறு இல்லே. வாழ்க்கையிலே ஒரு விதமான குறைவும் இல்லே. அந்தத் தத்துவம் இந்த நாட்டிலே இருந்தது. இதை வள்ளுவன் எடுத்தான். அதனாலே அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என ஒரு ஏகாரம் அடிச்சி கவலையே படாதேன்னான். சரி இருக்கிறாங்களே - இருக்கவனைப் பற்றிக் குறை சொல்லவேயில்லை. அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற உடன் சாமியார் எல்லாம் இல்லே நான் இப்படித்தான் இருப் பேன்னா, சரி. அதுவும் பிறர் பழிப்பதில்லையாயின் நன்று. - சாமியார் மாதிரி சாமியார் மானத்தை வாங்கினவன் வேறு யாருமில்லை. இந்த உடையைப் போட்டுக்கிட்டு அவங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கிறதே! தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று - - . - . (குறள்:274) வேடன் எப்படிப் புதருக்குள் இருந்துக்கிட்டு அம்பு போடறானோ அது மாதிரி இந்தச் சந்நியாசி வேஷத் தைப் போட்டுக் கொண்டு அயோக்கியத்தனம் பண்றே யடா, பாவின்னு அவன் தான் கேட்டான். ஆக,