பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 119 அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை. தமிழ் கோட் பாட்டில் வானப்பிரஸ்தம், வானப்பிரஸ்தத்தில் சந்நி யாசம் ஒன்றும் கிடையாது. இங்கிருந்தே வாழ்கிறதுதான் நம்முடைய வாழ்க்கை முறை. அதனாலே நால்வகை’ இங்கே கிடையாது. இதைக் கொண்டுவந்து ஏத்தனும் என்று பாடுபடுகிறவர்கள் உரையாசிரியர்கள். நால்வகை - பிரம்மச்சரியம், இல்லறம், வானப் பிரஸ்தம், சந்நியாசம். அவன் சொன்னான், பதினாறு வயது ஆண் பன்னிரண்டு வயது பெண்ணுக்குன்னா அதெல்லாம் சாரதா சட்டம் வருவதற்கு முன்னாலே பாடியது. இப்ப நாற்பத்தெட்டு ஆண்டு பிரம்மச்சரியம் காத்துக் கிழவனா போனப்பறம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்வானா? அப்போது 48 வயசிலே பதினெட்டு வயசுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினான். பட்டராமகன் கதைதான். அப்போ அவுங்க ஏன் பண்ணி னாங்க. அதைத் தப்புன்னு சொல்ல மாட்டேன். அவங்க ஆரியன் எங்கோ ஒரு இடத்திலே போனான். மாட்ட மேச்சுக்கிட்டுப் போயிட்டான். இவளை கூட இழுத்துக் கிட்டுப் போக முடியாது. போன இடத்திலே கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவ்வளவுதான். - கேள்வி: இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். ' - - (குறள்:1062) பதில்: இதற்கு என்ன விளக்கம் சொல்றது? கூடாதுன்னு சொல்றான். பல்லாக்குத் தூக்குற கதைக்கு விளக்கம் சொன்னேனே, அது இதற்குத்தான். பரந்து